ADDED : ஜன 11, 2024 12:22 AM
கோவை : துடியலுார் சேரன் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவர், 2019, செப்., 16ல், மனைவி தனலட்சுமியுடன்,59, சரவணம்பட்டி, பெருமாள் கோவில் அருகில் பைக்கில் சென்றார்.
அப்போது, ஒரு வழிபாதையில் வந்த டெம்போ மோதியதில், பின்னால் இருந்த தனலட்சுமி துாக்கி வீசப்பட்டு, டெம்போ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மாநகர கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, ஆவாரம்பாளையம் மாருதி நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் சுப்புராஜை,49, கைது செய்தனர்.
கோவை ஜே.எம்:8, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்புராஜூக்கு, ஓராண்டு சிறை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜரானார்.