/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா
கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா
கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா
கல்வி நிறுவனங்களில் ஓணம் திருவிழா
ADDED : செப் 04, 2025 11:15 PM

கொங்குநாடு நர்சிங் கல்லுாரி கோவை தீனம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு நர்சிங் கல்லுாரியில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடைகள் அணிந்து மகாபலிசக்கரவர்த்தியை கல்லுாரி மாணவர்கள்வரவேற்றனர்.
இந்நிகழ்வுக்கு, கொங்குநாடு நர்சிங் கல்லுாரி தலைமை அறங்காவலர் ராஜு தலைமை வகித்து நிகழ்வுகளை துவக்கி வைத்தார். ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன; மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கல்லுாரி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்த்தி விஸ்வநாதன், நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜோஸ்பின் மேரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் முரளிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேரு கல்லுாரி நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், பாரம்பரிய மகிழ்ச்சி மற்றும் கலாச்சார சிறப்புடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை கல்லுாரியின், கலாச்சார பாரம்பரிய மையம் ஏற்பாடு செய்தது. இதில், நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
விழாவில் சிங்காரிமேளம், புலிக்கலி, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கேரள பாரம்பரிய நடனங்கள் என பல்வேறு கலை நிகழ்வுகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். உறியடி, வடம்வலி போன்ற போட்டிகள் உற்சாகத்தை அதிகரித்தன. இதில், கல்லுாரி முதல்வர் விஜயகுமார், கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் மாலதி, ஒருங்கிணைப்பாளர் ரஜனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அக்சயா கல்லுாரி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
வளாகம் முழுமையும், கோலங்களை வண்ண மலர்களால் மாணவர்கள் அலங்கரித்தனர். மகாபலி சக்ரவர்த்தி போல் மாணவர்கள் சிலர் வேடமிட்டும், பாரம்பரிய ஆடைகள் அணிந்தும் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்வில், திருவாதிர நடனம், இசை கச்சேரி, கயிறு இழுத்தல், செண்டை மேளம், தாள இசைக்கருவி, கொடுகொட்டி கருவியை இசைத்து உற்சாகமாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர் உள்ளிட்ட பலர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
வேதாந்தா அகாடமி சீராபாளையம் வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஆசிரியர் தினம் மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளியின் இயக்குனர் சுதர்ஷன்ராவ், முதல்வர் சரவணன் ஆகியோர் ஆசிரியர்களை வாழ்த்தி, பரிசு வழங்கினர். ஓணம் பூக்கோலமிடப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், பெற்றோருக்கு பாட்டுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செண்டை மேளம், புலி வேடம், மகாபலி, வாமணன், மோகினி, கதகளி ஆகிய வேடமிட்டு மாணவர்கள் நடமாடினர்.
ரத்தினம் கல்வி குழுமம் ரத்தினம் கல்விக்குழுமத்தில் ஓணம் பண்டிகை, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கேரளாவின் பாரம்பரிய இசை நிகழ்வுடன், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாட்டங்கள் களைகட்டியது. மாணவர்களின் வண்ண பாரம்பரிய ஆடை அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. கயிறு இழுத்தல், உறியடி, நீர் நிறைத்தல், பூக்கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, முதல்வர்கள் பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், சுரேஷ், டீன் சபரீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.