/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா :நான்காம் நாளில் சிம்மவாகனத்தில் உலாகோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா :நான்காம் நாளில் சிம்மவாகனத்தில் உலா
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா :நான்காம் நாளில் சிம்மவாகனத்தில் உலா
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா :நான்காம் நாளில் சிம்மவாகனத்தில் உலா
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா :நான்காம் நாளில் சிம்மவாகனத்தில் உலா
ADDED : பிப் 24, 2024 01:13 AM
கோவை;கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை பெரியகடைவீதியிலுள்ள கோனியம்மன் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 10:00 மணிக்குமங்கள இசை முழங்க, அம்மன் திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் வழி நெடுக மங்கலப்பொருள் சமர்ப்பித்து வழிபட்டனர்.
மாலை 3:30 மணிக்கு, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. திரளான மகளிர் பங்கேற்று, அம்பாளை போற்றியும் 108 திருவிளக்குகளை ஏற்றி, போற்றிமாலை அர்ச்சனைகளை செய்தும், குங்குமார்ச்சனை செய்தும் வழிபட்டனர்.
பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், ரவிக்கை, வளையல், பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, இரவு திருவீதி உலா சென்றார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.