ADDED : மார் 24, 2025 11:16 PM
நெகமம்; நெகமம் அருகே உள்ள, காட்டாம்பட்டியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் சந்தை நடக்கிறது. இதில், காட்டாம்பட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள், 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து, வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த, 2024 டிசம்பர் மாதத்தில், காட்டம்பட்டியில் உள்ள கோவிந்தராஜ் என்பவர், 4.62 லட்சம் மதிப்பீட்டில் மார்க்கெட்டை ஏலம் எடுத்தார். இதில், வியாபாரிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த அளவுகளான, 100, 150 மற்றும் 250 ரூபாய் என்ற மதிப்பீட்டில் சந்தை வாடைக்கு விடப்படுகிறது.
இதில், ஒரு சில கடைகளுக்கு அதிக வாடகை வசூலிப்பதாக, வி.சி.க., நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து காட்டம்பட்டி வார சந்தையை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், கடை வைத்திருப்பவர்கள் அவருக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட இரண்டு முதல் நான்கு அடி வரை நீட்டிப்பு செய்திருந்தனர். மேலும், ஒரு நபருக்கு கடை வைக்க இடம் எந்த அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் வாடகை விவரங்கள் குறித்து வியாபாரிகளிடம் கேட்டறியப்பட்டது.
அரசு நிர்ணயத்தை விட அதிகமாக தொகை வசூல் செய்யும் பட்சத்தில் ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும்படி வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.