Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை! கவுன்சிலர்கள் ஆவேசம்

நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை! கவுன்சிலர்கள் ஆவேசம்

நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை! கவுன்சிலர்கள் ஆவேசம்

நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை! கவுன்சிலர்கள் ஆவேசம்

ADDED : ஜூன் 23, 2025 11:56 PM


Google News
கோவை; கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது; தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் (பொ) முத்துசாமி, உதவி நிர்வாக பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு பிரச்னைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.

அப்போது, கவுன்சிலர்கள் பேசியதாவது:

கவுண்டம்பாளையத்தில் சாலை பழுதை சரி செய்ய பல முறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அதே சமயம், எதிர்க்கட்சியினர் கூறியதும் உடனடியாக சாலையை சரி செய்கின்றனர். கவுன்சிலர்களாகிய எங்களுக்கு மதிப்பு தராதது வேதனைக்குரியது.

பீளமேடு உள்ளிட்ட இடங்களில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் மெதுவாக நடக்கிறது. இதனால், புதிதாக ரோடு போட முடியவில்லை.

குழாய் பதித்த இடங்களில் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்படும் பட்சத்தில், 'சைக்கிள் டியூப்' கொண்டு, தண்ணீர் கசிவை நிறுத்துகின்றனர்; அது எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்.

நல்லாம்பாளையம் போன்ற இடங்களில், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கிய வீடுகளுக்குள், கழிவு நீர் 'ரிவர்ஸ்' எடுக்கிறது. அடைப்பை சரி செய்யும் 'சூப்பர் சக்கர்' வாகனம் மண்டலத்துக்கு ஒன்று மட்டுமே உள்ளது.

இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டும்.

குடிநீர் இணைப்பு வழங்கும் இடங்களில் சரியாக சோதனை செய்யாமல் குடிநீர் வினியோகிப்பதால், பாதிப்புள்ள பகுதிகளில் கசிவு ஏற்படுகிறது. நிதி இருந்தும் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் தாமதமாக நடப்பதால், ரோடு போட முடியவில்லை. இதனால், பாதிக்கப்படுவது மக்கள் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us