/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அலுவலர்கள் மொபைல்போன் எண் இணையதளத்தில் பதிவேற்றணும்அலுவலர்கள் மொபைல்போன் எண் இணையதளத்தில் பதிவேற்றணும்
அலுவலர்கள் மொபைல்போன் எண் இணையதளத்தில் பதிவேற்றணும்
அலுவலர்கள் மொபைல்போன் எண் இணையதளத்தில் பதிவேற்றணும்
அலுவலர்கள் மொபைல்போன் எண் இணையதளத்தில் பதிவேற்றணும்
ADDED : ஜன 02, 2024 11:41 PM
உடுமலை;நகராட்சி இணையதளத்தில், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மொபைல்போன் எண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில், வருவாய் மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில், அலுவலர்கள், ஊழியர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டர்வர்கள் பணிபுரிகின்றனர்.
அவ்வகையில், நகராட்சியின் செயல்பாடு, திட்டங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவை அதற்கான இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் துறை ரீதியான அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது. மொபைல்போன் எண்கள் குறிப்பிடாமல் உள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. எனவே, அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில், அனைத்து பணியாளர்களின் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'இணையதளத்தில், ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விபரங்களை மொபைல்போன் எண்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, ஒவ்வொருவரும் தங்களது பகுதியின் அதிகாரி மற்றும் பணியாளர்களை தொடர்பு கொண்டு எளிதில் குறைகளை தெரிவிக்க முடியும். பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வசதியாக இருக்கும்,' என்றனர்.