Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் நவம்பரில் நடக்கிறது தொழில் பாதுகாப்பு மாநாடு

கோவையில் நவம்பரில் நடக்கிறது தொழில் பாதுகாப்பு மாநாடு

கோவையில் நவம்பரில் நடக்கிறது தொழில் பாதுகாப்பு மாநாடு

கோவையில் நவம்பரில் நடக்கிறது தொழில் பாதுகாப்பு மாநாடு

ADDED : மார் 21, 2025 11:06 PM


Google News
கோவை; கோவையில் தொழில் பாதுகாப்பு மாநாடு வரும் நவ., 9ம் தேதி நடத்தப்படும் என, தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு (டேப்) தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பு தலைவர் முத்துரத்தினம், பொதுச்செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவையில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.எஸ்.எம்.இ., சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், நாடு முழுதும் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர், முதலீட்டை இழந்து, கடனாளியாக தொழிலைவிட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த 2022 முதல் மின்கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் தொழில்முனைவோருக்கு 3ஏ1 கட்டண விகிதத்துக்கு மாற்ற, சட்டசபையில் அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. மின்சார நிலைக்கட்டணம் 457 சதவீதம் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும்.

மேற்கூரை சோலாருக்கு நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். தொழில் வரி உள்ளிட்ட வரிகள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, தொழில்துறையைப் பாதுகாக்க, மாநிலம் முழுதும் 420 தொழில் அமைப்புகள் பங்கேற்கும், தொழில் பாதுகாப்பு மாநாடு, வரும் நவ.,9ம் தேதி, கோவையில் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us