/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெயிலின் வெப்பத்தை வந்து பாரு என்கிறது நுங்கு!வெயிலின் வெப்பத்தை வந்து பாரு என்கிறது நுங்கு!
வெயிலின் வெப்பத்தை வந்து பாரு என்கிறது நுங்கு!
வெயிலின் வெப்பத்தை வந்து பாரு என்கிறது நுங்கு!
வெயிலின் வெப்பத்தை வந்து பாரு என்கிறது நுங்கு!
ADDED : பிப் 24, 2024 08:53 PM

கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலை சமாளிக்க பொதுமக்கள், நுங்கு, இளநீர் கடைகளை நாடிச் செல்கின்றனர்.
காலை 10:00 மணிக்கே, வெயில் மண்டையில் சுர்ர்ரென்று சுட்டெரிக்கிறது. இந்த வெயில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் கடுமையாக வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், தவிப்போருக்கு நுங்கு, இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு கடைகள் பெரிய ஆசுவாசம். உடல் உஷ்ணத்தை தணிக்க இந்த பானங்கள் பெரிதும் உதவுகின்றன. இவற்றில் உள்ள மருத்துவ குணங்களும் சிறப்பு.
இதில், நுங்கு மற்றும் பதனீர், வெயில் சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் பலர் இவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.
நுங்கு வியாபாரி மருதையன் கூறுகையில், ''நுங்கு, கோவை பகுதியில் அதிகம் கிடைப்பதில்லை, திருநெல்வேலி,பாவூர்சத்திரம், விருதுநகர் பகுதியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இளநீரை போல் எல்லா நாட்களிலும் நுங்கு, பதனீர் கிடைக்காது.
வெயில் காலத்தில்தான் கிடைக்கும். மே முடியும் வரை, நுங்கு விற்பனை நன்றாக இருக்கும். பதனீர் ஒரு கிளாஸ், 20 ரூபாய்க்கும், பதனீரும் நுங்கும் கலந்து கொடுத்தால், 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்,'' என்றார்.