/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எண்ணும் எழுத்தும் 'ஆன்லைன்' பயிற்சிஎண்ணும் எழுத்தும் 'ஆன்லைன்' பயிற்சி
எண்ணும் எழுத்தும் 'ஆன்லைன்' பயிற்சி
எண்ணும் எழுத்தும் 'ஆன்லைன்' பயிற்சி
எண்ணும் எழுத்தும் 'ஆன்லைன்' பயிற்சி
ADDED : ஜன 03, 2024 11:52 PM
உடுமலை : துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 'ஆன்லைன்' வாயிலாக வழங்கப்படுகிறது.
துவக்க நிலை வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் முறையில் பாடம் நடத்தப்படுகிறது. இதற்கான பயிற்சிகள் மற்றும் கையேடுகள் ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது.
மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. இப்பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல இடங்களில் பரவலான மழை இருப்பதால், வட்டார அளவிலான பயிற்சிகளை 'ஆன்லைன்' வாயிலாக வழங்க பள்ளிக்கல்விதுறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, கருத்தாளர்கள் பயிற்சி வீடியோக்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆசிரியர்கள் அதை பதிவிறக்கம் செய்து பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்கான பயிற்சி கையேடுகளும் ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.