/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முழு உடல் பரிசோதனையில் ஆர்வமில்லை; ஆசிரியர்கள் பலர் 'எஸ்கேப்' முழு உடல் பரிசோதனையில் ஆர்வமில்லை; ஆசிரியர்கள் பலர் 'எஸ்கேப்'
முழு உடல் பரிசோதனையில் ஆர்வமில்லை; ஆசிரியர்கள் பலர் 'எஸ்கேப்'
முழு உடல் பரிசோதனையில் ஆர்வமில்லை; ஆசிரியர்கள் பலர் 'எஸ்கேப்'
முழு உடல் பரிசோதனையில் ஆர்வமில்லை; ஆசிரியர்கள் பலர் 'எஸ்கேப்'
ADDED : ஜூன் 17, 2025 09:14 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தமட்டில், முழு உடல் பரிசோனைக்கு ஆசிரியர்கள் பலர், விருப்பம் தெரிவிக்கவில்லை என, தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா, 1.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இ.சி.ஜி., எக்ஸ்ரே உட்பட 16 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக, மாவட்டந்தோறும், வயது மூப்பு அடிப்படையில், 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால், நடப்பாண்டு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தமட்டில், முழு உடல் பரிசோதனைக்கு ஆசிரியர்கள் பலர், விருப்பம் தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மட்டுமே முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, சில நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுத்து கொள்ள முடியும்.
அதன்படி, ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ, கார்டியோகிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, வகுப்பு ஆசிரியர்களிடம் பரிசோதிக்க அழைப்பு விடுத்தும் விருப்பம் தெரிவிக்கவில்லை. காரணம், ஏதேனும் நோய் அறிகுறி கண்டறியப்பட்டால் மன உளைச்சல் ஏற்படும் என்பதால், பலரும், முழு உடல் பரிசோதனையை தவிர்த்து விடுகின்றனர்.
மேலும், பரிசோதனைக்கு செல்வோர், காலையில் டீ, காபி உள்ளிட்ட எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் நீண்ட துாரம் பயணிக்க வேண்டும் என்பதாலும் பரிசோதனையை தவிர்க்கின்றனர்.
இவ்வாறு, கூறினர்.