/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடமாநில தொழிலாளியை கொன்றவர் சிறையிலடைப்பு வடமாநில தொழிலாளியை கொன்றவர் சிறையிலடைப்பு
வடமாநில தொழிலாளியை கொன்றவர் சிறையிலடைப்பு
வடமாநில தொழிலாளியை கொன்றவர் சிறையிலடைப்பு
வடமாநில தொழிலாளியை கொன்றவர் சிறையிலடைப்பு
ADDED : மார் 24, 2025 06:24 AM
குன்னுார்: குன்னுாரில், வடமாநில தொழிலாளியை கொலை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குன்னுார் மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் அருகே, பழைய வீட்டில், வட மாநில தொழிலாளர்கள் நரேந்திர குஷிலியா,42. விரேந்தர்,36, ஆகியோர் தங்கி தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் கடந்த, 17ல், பணிக்கு வராத நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினர் ஆட்களை அனுப்பி பார்த்த போது, நரேந்திர குஷிலியா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. விசாரணைக்கு பின், தனிப்படை போலீசார் தலைமறைவான வீரேந்தரை தேடினர். அவர் ஒடிசாவில் கைது செய்யப்படார்.
அவரிடம் நடத்தி விசாரணையில், 'நரேந்திர குஷிலியாவை அழைத்து வந்த வீரேந்தர், தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். எஸ்டேட்டில் இருவரும் பணி புரிந்து வந்துள்ளனர். கொலை நடந்த தினத்தில் இருவருக்கும் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளது,' என, தெரிய வந்தது. தொடர்ந்து, குன்னுார் நீதிமன்றத்தில் விரேந்தரை ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.