/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை அள்ளும் பணியிலும் வடமாநில தொழிலாளர்கள் குப்பை அள்ளும் பணியிலும் வடமாநில தொழிலாளர்கள்
குப்பை அள்ளும் பணியிலும் வடமாநில தொழிலாளர்கள்
குப்பை அள்ளும் பணியிலும் வடமாநில தொழிலாளர்கள்
குப்பை அள்ளும் பணியிலும் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 21, 2025 12:36 AM
பெ.நா.பாளையம் : உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணி செய்ய வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் விஷ்வ பிரகாஷ் கூறியதாவது:
தற்போது பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சுகாதார பணியில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடல்நிலை மற்றும் பிற காரணங்களுக்காக இதில் பலர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தூய்மை பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதைத் தடுக்க துாய்மை பணிகளில் வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகளை இயக்கும் பணி அவர்களுக்கு தரப்படும். பின்னர் படிப்படியாக, பிற துாய்மை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.