/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : செப் 04, 2025 10:58 PM

வால்பாறை; வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை சாரல்மழையாக பெய்கிறது.
எஸ்டேட் பகுதியில் பெய்து வரும் மழையால் காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. மழை நீடிக்கும் நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடுங்குளிர் நிலவுகிறது.
இதனால், மக்கள் வெளியில் செல்லும் போது ஸ்வெட்டர் அணிந்து செல்கின்றனர். பலத்த காற்றுடன் கூடிய குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 159.15 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 1,171 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,480 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 6, பரம்பிக்குளம் - 12, ஆழியாறு - 2, வால்பாறை - 11, மேல்நீராறு - 14, கீழ்நீராறு - 15, காடம்பாறை - 2, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 4, துாணக்கடவு - 5, பெருவாரிப்பள்ளம் - 7, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.