/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நாளை உழவர் தினப்பேரணி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நாளை உழவர் தினப்பேரணி
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நாளை உழவர் தினப்பேரணி
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நாளை உழவர் தினப்பேரணி
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் நாளை உழவர் தினப்பேரணி
ADDED : ஜூலை 03, 2025 10:23 PM
கோவை; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், நாளை (ஜூலை, 5) உழவர் தினப்பேரணி நடக்கிறது.உழவர்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும், ஜூலை 5 ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும், உழவர் தினப் பேரணி, நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும்.இந்தாண்டும் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, நினைவஞ்சலி பொதுக்கூட்டம், உழவர் தினப் பேரணி நாளை நடக்கிறது.
கோவை ஈச்சனாரி முதல் மலுமிச்சம்பட்டி சர்வீஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில், அருகில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் ரோடு சந்திப்பு பி.வி., மஹால் திருமண மண்டபம் வரை உழவர் தினப் பேரணி காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது.
அதே திருமண மண்டபத்தில், நினைவஞ்சலி கூட்டம், காலை 11:00 மணிக்கு நடக்கிறது.நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் பங்கேற்க உள்ளார்.
முன்னாள் கூடுதல் எஸ்.பி.,க்கள் முத்துசாமி, வேலு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.