/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'சால்சர்' நிறுவனத்தின் புதிய உற்பத்திக்கூடம்'சால்சர்' நிறுவனத்தின் புதிய உற்பத்திக்கூடம்
'சால்சர்' நிறுவனத்தின் புதிய உற்பத்திக்கூடம்
'சால்சர்' நிறுவனத்தின் புதிய உற்பத்திக்கூடம்
'சால்சர்' நிறுவனத்தின் புதிய உற்பத்திக்கூடம்
ADDED : பிப் 24, 2024 12:17 AM
கோவை:சால்சர் நிறுவனம் 'ஸ்மார்ட் மீட்டர்' தயாரிப்புக்காக ஒருங்கிணைக்கப்பட்ட, புதிய உற்பத்திக் கூடத்தை துவக்கியுள்ளது.
கோவையை சேர்ந்த சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், ஸ்மார்ட் மீட்டர்கள் உற்பத்திக்கான ஒழுங்கினைக்கப்பட்ட புதியகூடத்தை அமைத்துள்ளது. இதில் ஆண்டுக்கு 40 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், 350 மீட்டர்களுக்கான தேவை உருவாகும். 'ரீவேம்ப்டு டிஸ்ட்ரிபியூஷன் செக்டார் ஸ்கீம்' எனும் இந்திய அரசின் திட்டத்தால் இந்த வளர்ச்சி சாத்தியப்படும்.
சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், இணை மேலாண் இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, ''புதிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய சாதனங்கள் உருவாக்கத்தில், இந்த புதிய தொழில் கூடம் பெரிதும் பங்காற்றும்,'' என்றார்.