/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம் கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
கோவை கோயில்களில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
ADDED : செப் 21, 2025 11:33 PM

கோவை; ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில், நவராத்திரி உற்சவத்தையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்பாளின் ஒவ்வொரு ரூபங்கள், ஒன்பது நாட்களுக்கும் வழிபாடு செய்யப்படுகிறது.
கோவில் அர்த்த மண்டபம், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேதவிற்பன்னர்களின் மஞ்சள் குங்கும லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்பாளின் அருள் பெற்றனர்.
ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோவிலில், 49வது ஆண்டு நவராத்திரி கலாசார உற்சவம் நேற்று துவங்கியது. இதில் ஸ்ரீ அக் ஷயா ராமநாதனின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது.
நாளை நாம பஜன் மண்டலி குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. ராம்நகர் கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் கோயில், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள் கோயில்களிலும், விமரிசையாக நவராத்திரி உற்சவங்கள் விமரிசையாக நடக்கின்றன.