/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ரீ சர்வே' நடத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை 'ரீ சர்வே' நடத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
'ரீ சர்வே' நடத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
'ரீ சர்வே' நடத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
'ரீ சர்வே' நடத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : அக் 22, 2025 10:47 PM
வால்பாறை: வால்பாறையில், 56 எஸ்டேட்கள் உள்ளன. இங்கு தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. கடந்த, 2018ம் ஆண்டு கண்துடைப்புக்காக அதிகாரிகள் மறு சர்வே செய்தனர்.
கடந்த, 1993ம் ஆண்டுக்கு பின், கடந்த, 2018ல் மறு சர்வே பணி நடந்தாலும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறையில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, மிளகு, ஏலம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டன. இதனால், சமீப காலமாக வனவிலங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், மனித -- வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, யானைகள் வழித்தடங்களை மறித்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளதாலும், ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளதாலும், மனித -- வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியாக இருந்த காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, தனியார் எஸ்டேட் நிர்வாகங்களால் தேயிலை பயிரிப்பட்டுள்ளது.
இது தவிர, வால்பாறை நகரை சுற்றிலும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
எனவே, வால்பாறையில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க, உயர்அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் 'ரீ சர்வே' செய்ய வேண்டும். இவ்வாறு, கூறினர்.


