/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மகன் இறப்பில் மர்மம்; தந்தை போலீசில் புகார்மகன் இறப்பில் மர்மம்; தந்தை போலீசில் புகார்
மகன் இறப்பில் மர்மம்; தந்தை போலீசில் புகார்
மகன் இறப்பில் மர்மம்; தந்தை போலீசில் புகார்
மகன் இறப்பில் மர்மம்; தந்தை போலீசில் புகார்
ADDED : பிப் 23, 2024 08:46 PM
கோவை;மகன் இறப்பில் மர்மம் இருப்பதால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தந்தை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
என் மகன் மந்திரமூர்த்தி, 40 பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வந்தார். தங்க நகை பட்டறை தொழில் செய்து வந்தார். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3ம் தேதி என் மகன் வெளியூருக்கு சென்று வந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர் எழுந்திருக்கவில்லை. நானும், என் உறவினரும் சென்று பார்த்த போது உடலில் காயங்கள் இருந்தன. மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றபோது, இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். என் மகன் தனது பெயரில், பல கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளார்.
அவரது பெயரில் அதிக சொத்துக்கள் உள்ளன. இவ்விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.