/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேரூராட்சி கவுன்சிலர்கள் தாலுகா ஆபீசில் தர்ணாபேரூராட்சி கவுன்சிலர்கள் தாலுகா ஆபீசில் தர்ணா
பேரூராட்சி கவுன்சிலர்கள் தாலுகா ஆபீசில் தர்ணா
பேரூராட்சி கவுன்சிலர்கள் தாலுகா ஆபீசில் தர்ணா
பேரூராட்சி கவுன்சிலர்கள் தாலுகா ஆபீசில் தர்ணா
ADDED : ஜன 07, 2024 12:39 AM
பொள்ளாச்சி;ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, கவுன்சிலர்கள், ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தி.மு.க., கவுன்சிலர் அஜீஸ் கூறியதாவது:
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கடந்த, 2015ம் ஆண்டு மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்ட, 3.08 ஏக்கர் நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். தாசில்தார் உத்தரவின் பேரில், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணியில் நில அளவையர் ஈடுபட்டார். ஆனால், தனியாருக்கு சாதகமாக நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மனு கொடுக்க வந்த போது, அலுவகத்தில் தாசில்தார் இல்லாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்பின், தாசில்தார் ரேணுகாதேவி பேச்சு நடத்தி, அளவீடு செய்யப்பட்ட இடத்தை நாளை (8ம் தேதி) நில அளவையர் முன்னிலையில் அளந்து கொடுப்பதாக உறுதியளித்தார். தீர்வு கிடைக்காவிட்டால் முதல்வரை சந்தித்து மனு கொடுப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.