Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெங்கடலட்சுமி பள்ளியில் பல்துறைக் கண்காட்சி

வெங்கடலட்சுமி பள்ளியில் பல்துறைக் கண்காட்சி

வெங்கடலட்சுமி பள்ளியில் பல்துறைக் கண்காட்சி

வெங்கடலட்சுமி பள்ளியில் பல்துறைக் கண்காட்சி

ADDED : ஜூலை 05, 2024 02:47 AM


Google News
கோவை:சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 'அங்கூரம் 2024' என்ற தலைப்பில், பல்வேறு துறைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் எல்.ஜி. பள்ளியின் ஆலோசகர் ரோஷனி, 'அரும்புகள் இதழ்விரித்து மலராதல் போல் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

ராமாயணம், திருக்குறள், பழமொழிகளின் வாயிலாக நற்பண்புக் கற்பித்தல், ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிகள், கணிதம் மற்றும் அறிவியல், காளான் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்க்கும் முறைகள், உலகக் கலாசாரம், வங்கி, அஞ்சலகம், பங்குச்சந்தை, ஏ.ஐ ஸ்மார்ட் வாக்களிக்கும் முறை, உள்பட பல்வேறு தலைப்புகள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஒவ்வொரு அரங்குகள் குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.

பள்ளித்தாளாளர் சுனிதா, பள்ளிச்செயலர் சந்திரகாந்தி, பள்ளி முதல்வர் கீதா, பள்ளித்துணை முதல்வர் வத்சலா ஆகியோர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us