/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதாள சாக்கடை பணிக்கு இடையூறு போக்குவரத்தை மாற்ற எம்.பி., ஆய்வு பாதாள சாக்கடை பணிக்கு இடையூறு போக்குவரத்தை மாற்ற எம்.பி., ஆய்வு
பாதாள சாக்கடை பணிக்கு இடையூறு போக்குவரத்தை மாற்ற எம்.பி., ஆய்வு
பாதாள சாக்கடை பணிக்கு இடையூறு போக்குவரத்தை மாற்ற எம்.பி., ஆய்வு
பாதாள சாக்கடை பணிக்கு இடையூறு போக்குவரத்தை மாற்ற எம்.பி., ஆய்வு
ADDED : மே 24, 2025 05:51 AM

கோவை : கோவை விளாங்குறிச்சி ரோடு மற்றும் 'கொடிசியா' ரோட்டில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டியிருப்பதால், போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்ப, எம்.பி., மற்றும் மேயர் கள ஆய்வு செய்தனர்.
'அம்ருத் 2.0' திட்டத்தில், ரூ.185 கோடியில், கோவை வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் விடுபட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கணபதி, காந்தி மாநகர், விளாங்குறிச்சி ரோடு ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை குழாய் பதித்தல் ஒரு 'பேக்கேஜ்', தண்ணீர் பந்தல், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மற்றும் ஒண்டிப்புதுாரில் விடுபட்ட இடங்களில் குழாய் பதிப்பது இன்னொரு, 'பேக்கேஜ்' என பிரித்து செய்யப்படுகிறது. நான்கு இடங்களில் 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டப்படுகிறது. மொத்தம், 141.945 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதிக்கப்படுகிறது.
விளாங்குறிச்சி ரோட்டிலும், 'கொடிசியா' பகுதியிலும் வாகன போக்குவரத்து இருப்பதால், குழாய் பதிக்க முடியாமல் ஒப்பந்த நிறுவனத்தினர் திணறுகின்றனர்.
அதனால், 'எஸ்' பெண்டு பகுதியில் இருந்து, சேரன் மாநகர் வழியாக கணபதிக்கு சென்றடையும் வழித்தடத்தை ஒரு வழிப்பாதையாக்கினால், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்கலாம் என்கிற, கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கோவை எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து, அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து இடையூறின்றி, குழாய் பதிக்க வசதியாக,ஒரு வழிப்பாதையாக மாற்றிக் கொடுக்க எம்.பி., அறிவுறுத்தினார்.
கணபதியில் இருந்து விளாங்குறிச்சி ரோட்டில் வரும்போது, சேரன் மாநகரில் இருந்து மாற்று வழித்தடத்தில் வாகனங்களை இயக்க, யோசனை தெரிவிக்கப்பட்டது. அவ்வழித்தடத்தை ஆய்வு செய்து, வாகனங்களை மாற்றி அனுப்புவதாக போலீசார் உறுதியளித்தனர்.