/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்தில் சிக்கிய மாணவருக்கு எம்.பி., கனிமொழி உதவிவிபத்தில் சிக்கிய மாணவருக்கு எம்.பி., கனிமொழி உதவி
விபத்தில் சிக்கிய மாணவருக்கு எம்.பி., கனிமொழி உதவி
விபத்தில் சிக்கிய மாணவருக்கு எம்.பி., கனிமொழி உதவி
விபத்தில் சிக்கிய மாணவருக்கு எம்.பி., கனிமொழி உதவி
ADDED : பிப் 11, 2024 02:33 AM

கோவை:கோவை அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லுாரி மாணவரை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. எம்.பி., கனிமொழி தலைமையிலான அக்குழுவினர் பங்கேற்று விட்டு, திருப்பூர் செல்ல, நீலாம்பூர் பைபாஸில் காரில் பயணித்தனர்.
அவ்வழியாக பைக்கில் சென்ற, பி.காம்., படிக்கும் மாணவன் ராபின், லாரியில் மோதியதில் காயமடைந்து, ரோட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதைப்பார்த்த, எம்.பி., கனிமொழி, உடனடியாக காரை நிறுத்தி, இறங்கிச் சென்றார்.
காயமடைந்து கிடந்த மாணவனை மீட்டு, தி.மு.க., பிரமுகரின் காரில் ஏற்றி, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். பின், அம்மருத்துவமனைக்கும் சென்று, அம்மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரிடம் கனிமொழி கேட்டுக் கொண்டார்.