ADDED : ஜூன் 13, 2025 10:04 PM
சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை: சூலுாரில், திருச்சி மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளும் கிடங்குகள் வசதி உள்ளது.
கிடங்கில் சேமித்து வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இதனை, சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இ - நாம் திட்டத்தின் வாயிலாக, விற்று உரிய விலையை பெற்று பயனடைய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை 99769 63449 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.