/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 300க்கும் மேற்பட்ட வீரர்கள்... 24 மணி நேரமும் தயார்!மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 300க்கும் மேற்பட்ட வீரர்கள்... 24 மணி நேரமும் தயார்!
மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 300க்கும் மேற்பட்ட வீரர்கள்... 24 மணி நேரமும் தயார்!
மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 300க்கும் மேற்பட்ட வீரர்கள்... 24 மணி நேரமும் தயார்!
மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 300க்கும் மேற்பட்ட வீரர்கள்... 24 மணி நேரமும் தயார்!
ADDED : மே 30, 2025 12:12 AM

கோவை : கோவைக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட, 300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கோவை தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவைபுதுார், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என, 13 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் உள்ளன.
தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதையடுத்து கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வால்பாறை, பொள்ளாச்சி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்கிறது. கோவை சிறுவாணி அடிவாரத்தில் 59மி.மீ., மழை பதிவானது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 37.34 மி.மீ., மழை பதிவானது.
கனமழை பெய்யும் போது, மாநகரில் உள்ள பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதிக அளவில் காற்று அடிப்பதால் மரங்கள், மின் கம்பம் கீழே விழும் வாய்ப்புள்ளது. இதனால், பேரிடர் மேலாண்மை குழுவினர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தீயணைப்புத்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும், 300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த ஐந்து நாட்கள் பெய்த மழையால் கோவையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. மழை காரணமாக மாவட்டத்தில், 15 முதல் 20 மரங்கள் வரை விழுந்துள்ளன. தற்போது வரை பெரிய பாதிப்பு இல்லை எனினும், பாதிப்பு ஏற்பட்டால் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தீயணைப்புத்துறை கோவை மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''வெள்ளம் ஏற்பட்டால் பொது மக்களை மீட்க ரப்பர் போட், இடிபாடுகளில் மீட்பு பணியில் ஈடுபட 'கான்கிரீட் கட்டர்', மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்த 'பவர் சா', 400க்கும் மேற்பட்ட லைப் ஜாக்கெட், அவசர கால மீட்பு ஊர்தி உள்ளிட்ட உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. மேலும் அனைத்து வீரர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.
''வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில், தீயணைப்புத்துறையினர் தயாராக உள்ளோம்,'' என்றார்.