/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்; கலெக்டர் பேச்சு அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்; கலெக்டர் பேச்சு
அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்; கலெக்டர் பேச்சு
அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்; கலெக்டர் பேச்சு
அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்; கலெக்டர் பேச்சு
ADDED : மே 23, 2025 11:47 PM

கோவை : கோவை மாநகராட்சி சார்பில், 'கல்லூரிக் கனவு 2025' எனும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, நேற்று இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த 90 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். உயர்கல்வி பயில்வதற்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர், உயர்கல்விக்கு செல்ல வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதோடு, ஆதார் அடையாள அட்டை திருத்தம் செய்வதற்கும், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கல்லூரிகளில் உள்ள படிப்புகள், நுழைவுத் தேர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ், மேயர் ரங்கநாயகி, எம்.பி.,ராஜ்குமார், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.