Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகளிர் உரிமை தொகைக்கு ஜமாபந்தியில் அதிக மனுக்கள்

மகளிர் உரிமை தொகைக்கு ஜமாபந்தியில் அதிக மனுக்கள்

மகளிர் உரிமை தொகைக்கு ஜமாபந்தியில் அதிக மனுக்கள்

மகளிர் உரிமை தொகைக்கு ஜமாபந்தியில் அதிக மனுக்கள்

ADDED : மே 21, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும், ஜமாபந்தி இரண்டாவது நாளில், மகளிர் உரிமை தொகை கேட்டு, அதிக மனுக்கள் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

நேற்று இரண்டாவது நாளில் காரமடை, மருதூர், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, ஜமாபந்தி நடந்தது.

இதில் மொத்தம், 218 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இதில் மகளிர் உரிமை தொகை கேட்டு அதிக மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

இன்று நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய ஊராட்சிகளுக்கும், நாளை (23ம் தேதி) இரும்பறை, இலுப்பநத்தம், சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் தாசில்தார் ராமராஜ் செய்து வருகிறார்.

அன்னூர்


அன்னூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று அன்னூர் வடக்கு உள்வட்டத்தைச் சேர்ந்த 11 ஊராட்சி மக்கள் பங்கேற்ற ஜமாபந்தி நடந்தது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமை வகித்தார். முகாமில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

கணேசபுரம் முன்னாள் வார்டு உறுப்பினர் சுகுண பிரியா கோவிந்தராஜ் அளித்த மனுவில், 'பல லட்சம் ரூபாய் செலவில் கணேசபுரம் ஆதி விநாயகா நகரில் கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

வெங்கடாசலபதி நகர், சிவமுருகன் நகர், சாய் கார்டன் உள்ளிட்ட ஏழு இடங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பட்டா மாறுதல் கோரி 57, இலவச வீட்டு மனை பட்டா கோரி 54, நில அளவை செய்யக்கோரி 11, இலவச பட்டா கோரி 7 உள்ளிட்ட 193 மக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் கூறுகையில்,' நீர்வளத்துறை, மின்வாரியம், வட்டாரப் போக்குவரத் அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம், என பல்வேறு துறை அதிகாரிகள் வரவில்லை. ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் தான் ஆர்.டி.ஓ.,விடம் கொடுக்கிறோம். ஆனால் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் ஆர்.டி.ஓ., அப்படியே ஒன்றிய அதிகாரிகளிடம் மனுக்களை தருகிறார். இதனால் இங்கு தரும் மனுக்களுக்கு நடவடிக்கை இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us