/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கிரிப்டோ கரன்சி' பெயரில் பண மோசடி: பாலக்காட்டில் ஒருவர் கைது'கிரிப்டோ கரன்சி' பெயரில் பண மோசடி: பாலக்காட்டில் ஒருவர் கைது
'கிரிப்டோ கரன்சி' பெயரில் பண மோசடி: பாலக்காட்டில் ஒருவர் கைது
'கிரிப்டோ கரன்சி' பெயரில் பண மோசடி: பாலக்காட்டில் ஒருவர் கைது
'கிரிப்டோ கரன்சி' பெயரில் பண மோசடி: பாலக்காட்டில் ஒருவர் கைது
ADDED : ஜன 12, 2024 10:36 PM

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு அருகே, 'கிரிப்டோ கரன்சி' பெயரில் ஆன்லைன் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு கல்லேபுள்ளியைச் சேர்ந்தவர் மிதுன்தாஸ், 38, இவர் 'மெட்டாபோழ்ஸ்' என்ற 'ஆன்லைன்' டிரேடிங் கம்பெனியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபம் பெறலாம் என கூறி பலரையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். முதலீடு செய்தவர்களின் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீசில், அதிகளவில் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் பிஜு அபிரகாம் தலைமையிலான சிறப்பு படையினர் விசாரணையில், மிதுன்தாஸ் உட்பட பலர் கூட்டாக சேர்ந்த மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மிதுன்தாஸை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து இரு கார்கள், லேப்டாப்கள், மொபைல்போன், பணம் பரிவர்த்தனை செய்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிஜு ஆபிரகாம் கூறியதாவது: 'ஆன்லைன்' டிரேடிங் என்ற பெயரில் உள்ள லிங்கை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். முதலீடு செய்யும் பணத்தை பயன்படுத்தி வாங்கும் கரன்சி, 'மெட்டாபோழ்ஸ்' என்ற நிறுவனத்தின் மொபைல்போன் ஆப்பிற்கு பரிவர்த்தனை செய்வதோடு, பணம் அனைத்தும் அவர்கள் நடத்தும் மணி செயினில் உள்ள, மேல் தரப்பில் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் சென்று விடும்.
தொடர்ந்து முதலீடு செய்ய இவர்கள் ஊக்குவிப்பார்கள். அப்படி முதலீடு செய்தால் தான் முன் முதலீடு செய்த பணமும் லாபமும் கிடைக்கும் என்று நம்ப வைத்துள்ளனர். இந்த திட்டத்தில் சிலருக்கு பணம் கிடைத்துள்ளது. இதனால், நாளுக்கு நாள் முதலீடு அதிகரித்துள்ளது. இப்படி, ஒரு லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தின் வாயிலாக முதலீடு செய்தவர்கள், தற்போது பணத்தை இழந்துள்ளனர்.
இதற்காக, நகரில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டும் அரங்குகளில் 'மோட்டிவேஷன்' வகுப்புகள் நடத்தி, இத்திட்டத்தில் ஆட்களை சேர்த்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட மணி செயின் பிசினஸ் நடத்துவது, ஆட்களை சேர்ப்பது, திட்டத்தில் உறுப்பினராவது சட்ட விரோத செயலாகும். இதை மக்கள் அறிந்து கொண்டு, இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.