Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோடி பிறந்தநாள்: அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

மோடி பிறந்தநாள்: அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

மோடி பிறந்தநாள்: அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

மோடி பிறந்தநாள்: அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

ADDED : செப் 17, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., சார்பில் காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள புகழ்பெற்ற வைணவ திருத்தலமான அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், காரமடை நகர பா.ஜ. சார்பில் பிரதமர் மோடி, ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரமடை நகர தலைவர் சதீஷ் குமார், வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

----அன்னுார் பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாள் விழா அன்னூர் கைகாட்டியில் நேற்று நடந்தது. பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் பிரதமரின் 11 ஆண்டு சாதனை குறித்து மாவட்ட பொதுச் செயலாளர் பிரியதர்ஷினி பேசினார். இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜராஜசாமி, ஒன்றிய தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து, அன்னூர் அரசு மருத்துவமனையில் 75 பேருக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் பா.ஜ., வினர் ரொட்டி வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சூலுார் சூலுார், கருமத்தம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை, பா.ஜ., வினர் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்த நாளை ஒட்டி, சூலுார் வேங்கட நாத பெருமாள் கோவிலில், சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில்,சிறப்பு பூஜை நடந்தது. பிரதமர் மோடி நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் நாட்டை மேலும் பல ஆண்டுகள் வழி நடத்த கூட்டு பிரார்த்தனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ., கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. பா.ஜ., இளைஞரணி சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதேபோல், கருமத்தம்பட்டி மண்டல் பா.ஜ., சார்பில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு பிராத்தனை நடந்தது. பனை விதைகள் நடப்பட்டன. மண்டல தலைவர்கள் விக்னேஷ், பிரகாஷ், ரவிக்குமார், அசோக், கிருஷ்ணன், நந்தகோபால், பிராசாந்த், ஹரீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us