ADDED : பிப் 12, 2024 12:37 AM
பெ.நா.பாளையம்:கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் சந்திப்பு போக்குவரத்து நெருக்கடி மிகுந்துள்ள பகுதியாக உள்ளது.
இங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தி சீர்படுத்தவும், வாகனங்களை கண்காணிக்கவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட டிராபிக் பூத் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், நான்கு கேமரா, சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்ட 'மானிட்டர்' மற்றும் மைக், ஏசி ஆகியன உள்ளன. இந்த அதிநவீன கேமரா வாயிலாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக கண்டறிய முடியும்.
மேலும், ரோட்டில் எதிர் திசையில் செல்ல, அங்குள்ள பட்டனை அமுக்கினால், 30 வினாடிகளுக்குள் ரோட்டை கடக்கும் படியான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.