Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மிதமான மழை பெய்யும்! காலநிலை மையம் தகவல்

மிதமான மழை பெய்யும்! காலநிலை மையம் தகவல்

மிதமான மழை பெய்யும்! காலநிலை மையம் தகவல்

மிதமான மழை பெய்யும்! காலநிலை மையம் தகவல்

ADDED : ஜூன் 20, 2025 11:51 PM


Google News
பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில், வரும் 22ம் தேதி வரை, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கைவருமாறு:

வரும் 22ம் தேதி வரை,லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 12 முதல் 24 கி.மீ., வேகத்தில் காற்று எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையும் சுழற்காற்றும் எதிர்பார்க்கப்படுவதால், 5 மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்கவும்.

மழை பெய்வதால், அதிகப்படியான மழை நீரை போதிய வடிகால் வசதி செய்து, பண்ணைக்குட்டைகளில் சேமிப்பதால் தேவையான சமயங்களில் பயன்படுத்தலாம். மழை காரணமாக, இறவை சோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை விதைப்பை ஒத்திவைக்க வேண்டும்.

ஏற்கனவே விதைத்த இடங்களில் போதிய வடிகால் வசதி செய்யவும். சாரல் மழை காரணமாக அடிச்சாம்பல் நோய் வரலாம் என்பதால், மெட்டாலாக்ஸில் எம் 31.8 சதவீதம் இ.எஸ்., என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிக்கவும். மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு பின்பருவ கரும்பு நடவை போதிய வடிகால் வசதி செய்து, தொடர்ந்து மேற்கொள்ளவும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us