/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ADDED : மே 22, 2025 11:55 PM
தொண்டாமுத்தூர் : பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில், ஆய்வு செய்தபோது, பாலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் இருக்க கூடாது. தரம் குறைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
கோவையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று கோவை வந்திருந்தார். இந்நிலையில், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில், அமைச்சர் ஆய்வு செய்தார். பாலின் தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகம், புதியதாக திறக்கப்பட்ட பன்னீர் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, தர ஆய்வகத்தில், பாலின் தரத்தில் பல்வேறு கருத்துக்கள் வருகிறது. பாலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் இருக்க கூடாது. பாலின் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, பால் கூட்டுறவு சங்கத்தினர், சம்பளம் உயர்வு செய்யவேண்டும் என, மனு அளித்தனர். அவர்களிடம், உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன். அதேபோல, நீங்கள் மாதந்தோறும், அதிக பாலை தர வேண்டும். தீவனங்கள் விற்பனை சரிவர செய்வதில்லை. தீவன விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனக்கூறினார்.