/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுமுகையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு சிறுமுகையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
சிறுமுகையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
சிறுமுகையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
சிறுமுகையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ADDED : மே 26, 2025 05:10 AM
மேட்டுப்பாளையம் ; சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் அமைச்சர் முத்துசாமி தேசமடைந்த வீடுகளை பார்வையிட்டார்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் மழையால் முத்தம்மாள் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு ஒன்று சேதமடைந்திருந்தது.
அந்த வீட்டை பார்த்து ஆய்வு செய்துவிட்டு, அதிகாரிகளிடம் மூதாட்டிக்கு அரசு திட்டத்தில் புதிய வீடு கட்டி தர அறிவுறுத்தினர். மேலும் அதே பகுதியில் மாற்றுத்திறனாளி இளைஞர் கனீஷை சந்தித்த அமைச்சர் முத்துசாமி அவரது குறைகளை கேட்டறிந்தார்.
பின் அவருக்கு வீல் சேர் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே போல் வச்சினம்பாளையம் பகுதியில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, போர்வை மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்து உதவினார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.----