/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப 'அப்டேட்' அவசியம்: பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை
ADDED : ஜூன் 16, 2025 12:42 AM

கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரியின், 54வது பட்டமளிப்பு விழா, கொடிசியா அரங்கில் நேற்று மாலை நடந்தது. 144 பேருக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இதில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில், 72 மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதன் வாயிலாக, 11,850 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவர்களாக பட்டம் பெறுகின்றனர். மருத்துவர்கள் கட்டாயம் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து, 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா என்ற ஒன்று வரும் என்பது, நம் யாருக்கும் தெரியாது. ஆனால், கொரோனாவின் உருமாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற எவ்வித சூழல்களையும் எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இ.எஸ்.ஐ.,மருத்துவக் கல்லுாரி
முன்னதாக, காலையில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரியின் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. 94 பேர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றனர்.
பட்டங்களை வழங்கிய அமைச்சர் சுப்ரமணியன், ''பிற துறை போன்று அல்லாமல், மருத்துவ பட்டம் பெறுபவர்களுக்கு, சமூக பொறுப்புகள் அதிகம். அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் 22,000 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கவுன்சிலிங் வாயிலாக, 42 ஆயிரம் பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்டம் பெறும் மாணவர்கள், எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வெழுதி, அரசு மருத்துவ பணிக்குள் வர வேண்டும்,'' என்றார்.
இரு நிகழ்வுகளிலும், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் அருண்தம்புராஜ், கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மருத்துவ கல்லுாரி டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி டீன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.