/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூட்டுறவு துறை சார்பில் மினி மராத்தான் கூட்டுறவு துறை சார்பில் மினி மராத்தான்
கூட்டுறவு துறை சார்பில் மினி மராத்தான்
கூட்டுறவு துறை சார்பில் மினி மராத்தான்
கூட்டுறவு துறை சார்பில் மினி மராத்தான்
ADDED : ஜூன் 15, 2025 10:24 PM
கோவை; சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத் துறை சார்பில், சென்னை தீவுத்திடலில், ஜூலை 6ம் தேதி காலை 5:30 மணிக்கு, மினி மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
5 கி.மீ., நடக்கும் போட்டியில், இருபாலரும் பங்கேற்கலாம். போட்டிக்கான வயது வரம்பு 18 வயதிலிருந்து 40 வயதுக்குள். 40 வயதில் இருந்து அதற்கு மேல்.
முதல் பரிசாக 30 ஆயிரம், இரண்டாம் பரிசாக 20 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் என, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும்.
பங்கேற்க, http://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணைய முகவரியில் பதிவு செய்து நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விபரங்களுக்கு, 97909 54671 என்ற எண் வாயிலாகவும், tncu08@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.