/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வைகாசி விசாகம் முன்னிட்டு போத்தனுாரில் பால்குட ஊர்வலம் வைகாசி விசாகம் முன்னிட்டு போத்தனுாரில் பால்குட ஊர்வலம்
வைகாசி விசாகம் முன்னிட்டு போத்தனுாரில் பால்குட ஊர்வலம்
வைகாசி விசாகம் முன்னிட்டு போத்தனுாரில் பால்குட ஊர்வலம்
வைகாசி விசாகம் முன்னிட்டு போத்தனுாரில் பால்குட ஊர்வலம்
ADDED : ஜூன் 09, 2025 11:23 PM
போத்தனூர்; கோவை போத்தனூரிலுள்ள, கேம்ப் மாரியம்மன் கோவில் வளாகத்தில் முருகன் சன்னதி உள்ளது. நேற்று வைகாசி விசாகம் முன்னிட்டு, போத்தனூர் மெயின் ரோட்டிலுள்ள பேச்சியம்மன் கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட முருகர், மயில் வாகனத்தில் வர, காவடி, பால்குடத்துடன் ஊர்வலம் துவங்கி, சர்ச் ரோடு வழியே கோவிலை சென்றடைந்தது.
அங்கு முருக பெருமானுக்கு, பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.