/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் பாதாள சாக்கடை திட்டம்; கூடுதல் பகுதிகளை சேர்க்க அரசு ஒப்புதல் மேட்டுப்பாளையம் பாதாள சாக்கடை திட்டம்; கூடுதல் பகுதிகளை சேர்க்க அரசு ஒப்புதல்
மேட்டுப்பாளையம் பாதாள சாக்கடை திட்டம்; கூடுதல் பகுதிகளை சேர்க்க அரசு ஒப்புதல்
மேட்டுப்பாளையம் பாதாள சாக்கடை திட்டம்; கூடுதல் பகுதிகளை சேர்க்க அரசு ஒப்புதல்
மேட்டுப்பாளையம் பாதாள சாக்கடை திட்டம்; கூடுதல் பகுதிகளை சேர்க்க அரசு ஒப்புதல்
ADDED : மார் 25, 2025 07:08 AM
சென்னை; ''மேட்டுப்பாளையம் நகராட்சியில், புதிதாக உருவான ஒருசில குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடந்துவரும் பாதாளசாக்கடை பணிகளில் விடுப்பட்ட பல பகுதிகளை சேர்த்து விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்து, அமைச்சர் நேரு பேசியதாவது:
மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டம், 33 வார்டுகளுக்கு செயல்படுத்த 2016ம்ஆண்டு செப்டம்பர் 9ம்தேதி 100 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழக குடிநீர் வாரியம் வாயிலாக மூன்று பிரிவுகளாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி வாயிலாக 2,770 வீடுகளுக்குஇணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் ஒப்பந்ததாரர் காலதாமதமாக பணி செய்தததால், அவரது டெண்டர் ரத்து செய்யப்பட்டது. திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டு மறு டெண்டர் கோரப்பட்டு கடந்த 3ம்தேதி பணி உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பணிகள், செம்டம்பர் 30ம்தேதி முடிக்கப்படும். மேலும், 2015ம்ஆண்டு நில அளவுப்படி தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தை நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக உருவான ஒருசில குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, தமிழக குடிநீர் வாரியம் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நேரு கூறினார்.