/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறுமைய விளையாட்டு மெட்ரோ பள்ளி முதலிடம் குறுமைய விளையாட்டு மெட்ரோ பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு மெட்ரோ பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு மெட்ரோ பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு மெட்ரோ பள்ளி முதலிடம்
ADDED : செப் 10, 2025 10:25 PM
மேட்டுப்பாளையம்; பள்ளி கல்வி துறை சார்பில், காரமடை அடுத்த புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 66வது குடியரசு தின, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, 50 பள்ளிகளில் இருந்து, 640 மாணவர்கள் பங்கேற்றனர். தடகளம் உட்பட 14 வகை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் பிரிவில், மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 74 புள்ளிகள் எடுத்து முதலிடம், மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி, 73 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம், காரமடை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 56 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பெற்றன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, உள்ளிட்டோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
விழாவில், புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.