/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மன ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிமன ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மன ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மன ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மன ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 10, 2024 10:31 PM
உடுமலை: உடுமலையில் பிரம்மா குமாரிகள், ராஜயோக தியான நிலையத்தின் சார்பில், கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி போடிபட்டி அருணா கலையரங்கத்தில் இன்று (11ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
மேலும் இதன் சார்பில், கிராமங்கள் தோறும் சென்று நற்பண்புகளை வளர்க்கும் எளிய தியான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதன் வாயிலாக, மன அமைதி, மகிழ்ச்சி, தீய பழக்க, வழக்கங்களிலிருந்து தீர்வு காணுதல், போதைப்பொருள்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பெறலாம்.
இந்நிகழ்ச்சியில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பயன்பெறாலம்.