ADDED : செப் 03, 2025 11:24 PM
கோவை; கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. குழுவாக இணைந்து செயல்படுவது குறித்தும், தாமதமின்றி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. 40 சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.