/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வன எல்லையில் மருத்துவ கழிவு எரிப்பு வன எல்லையில் மருத்துவ கழிவு எரிப்பு
வன எல்லையில் மருத்துவ கழிவு எரிப்பு
வன எல்லையில் மருத்துவ கழிவு எரிப்பு
வன எல்லையில் மருத்துவ கழிவு எரிப்பு
ADDED : செப் 22, 2025 10:38 PM

பொள்ளாச்சி, ; அங்கலக்குறிச்சி அருகே, வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில், மருத்துவ கழிவு குவித்து எரியூட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி அருகே நரிமுடக்குப் பகுதியில் வனத்துறையால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு, தேங்கும் தண்ணீர், வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கிறது.
அவ்வகையில், யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், வனவிலங்குகள், தடுப்பணைக்கு செல்லும் வழித்தடத்தில், மர்ம நபர்கள், மருத்துவக் கழிவுகளை கொட்டி, அதனை தீயிட்டு எரித்துள்ளனர்.
குறிப்பாக, கண்ணாடி பாட்டில்கள், சிரெஞ்ச் உள்ளிட்டவை அங்கு சிதறி கிடப்பதால், வனவிலங்குகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை, அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: வனத்தை ஒட்டிய பகுதிகளில், மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரியூட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதனை முழுமையாக அகற்ற வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.