/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சர்வதேச இறகுப்பந்து ராமகிருஷ்ணாவுக்கு பதக்கம்சர்வதேச இறகுப்பந்து ராமகிருஷ்ணாவுக்கு பதக்கம்
சர்வதேச இறகுப்பந்து ராமகிருஷ்ணாவுக்கு பதக்கம்
சர்வதேச இறகுப்பந்து ராமகிருஷ்ணாவுக்கு பதக்கம்
சர்வதேச இறகுப்பந்து ராமகிருஷ்ணாவுக்கு பதக்கம்
ADDED : பிப் 06, 2024 12:25 AM
கோவை;சர்வதே அளவிலான இறகுப்பந்து போட்டியில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று அசத்தினர்.
சர்வதேச அளவிலான, '33-வது ஈரான் சர்வதேச பேட்மிண்டன் சேலஞ்ச் -2024', ஈரான் நாட்டில் உள்ள யாஸ்ட் நகரில் நடந்தது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சதீஷ்குமார், ஆத்யா வாரியத் பங்கேற்றனர்.
இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற கோவை மாணவர்கள், இறுதிப்போட்டியில் சமீத் ரெட்டி மற்றும் சிக்கி ரெட்டி ஜோடியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றனர்.
இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், சதீஷ்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற மாணவர்களை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.