/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'செக்' மோசடி வழக்கில் மேயரின் கணவர் ஆஜர்'செக்' மோசடி வழக்கில் மேயரின் கணவர் ஆஜர்
'செக்' மோசடி வழக்கில் மேயரின் கணவர் ஆஜர்
'செக்' மோசடி வழக்கில் மேயரின் கணவர் ஆஜர்
'செக்' மோசடி வழக்கில் மேயரின் கணவர் ஆஜர்
ADDED : ஜன 03, 2024 12:03 AM
கோவை;செக் மோசடி வழக்கில், கோவை மாநகராட்சி தி.மு.க., மேயரின் கணவர், கோர்ட்டில் ஆஜரானார்.
கோவை, மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். கோவை மாநகராட்சி தி.மு.க.,மேயர் கல்பனாவின் கணவர். இவர், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஆறுக்குட்டி என்பவரிடம், ஒன்பது லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்த, வங்கி காசோலை கொடுத்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.
இதனால் ஆனந்தகுமார் மீது, கோவையிலுள்ள காசோலை மோசடி வழக்கை விசாரிக்கும், இரண்டாவது விரைவு கோர்ட்டில், ஆறுக்குட்டி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, ஆனந்தகுமார் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். தொடர்ந்து, விசாரணை பிப்., 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.