/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆக.,க்குள் முடிக்க மேயர் அறிவுரை 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆக.,க்குள் முடிக்க மேயர் அறிவுரை
24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆக.,க்குள் முடிக்க மேயர் அறிவுரை
24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆக.,க்குள் முடிக்க மேயர் அறிவுரை
24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள்; ஆக.,க்குள் முடிக்க மேயர் அறிவுரை
ADDED : மார் 25, 2025 11:13 PM
கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆக., மாதத்துக்குள், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை முடிக்க, 'சூயஸ்' நிறுவனத்தினருக்கு, மேயர் ரங்கநாயகி அறிவுறுத்தினார்.
கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர திட்டத்தில் குடிநீர் குழாய் பதித்து, இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. குழாய் பதிப்பது, தொட்டி கட்டுவது என, 80 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன. மொத்தம், 1.5 லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும்.
இதுவரை, 55 ஆயிரம் இணைப்புகளுக்கு, 24 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளில் குழாய் பதித்து, இணைப்பு வழங்கும் பணி தற்போது தான் துவக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. 'சூயஸ்' நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதில், 'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிப்., மாதத்துக்கு பின், எந்த பணியும் செய்ய வாய்ப்பிருக்காது. அதற்கு முன்னதாக ரோடு போடும் பணியை முடிக்க வேண்டும். எனவே, குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். ஆக., மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டுமென, மேயர் அறிவுறுத்தினார்.