/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மாஸ்க்' அணிய வேண்டும் மறுபடியும்! மருத்துவமனையில் 'அலர்ட்' 'மாஸ்க்' அணிய வேண்டும் மறுபடியும்! மருத்துவமனையில் 'அலர்ட்'
'மாஸ்க்' அணிய வேண்டும் மறுபடியும்! மருத்துவமனையில் 'அலர்ட்'
'மாஸ்க்' அணிய வேண்டும் மறுபடியும்! மருத்துவமனையில் 'அலர்ட்'
'மாஸ்க்' அணிய வேண்டும் மறுபடியும்! மருத்துவமனையில் 'அலர்ட்'
ADDED : ஜூன் 01, 2025 01:26 AM

கோவை: பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவதன் அவசியம் குறித்து, கோவை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று பரவி வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயம் என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், பாதிக்கப்படுபவர்கள் குறித்த தரவுகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்தப்படுகிறது.
இது குறித்து, மருத்துவமனையின் நுழைவாயிலில், ஒப்பந்த பணியாளர்கள் மைக் வாயிலாக அறிவித்து வருகின்றனர்.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கொரோனா மட்டுமல்ல, மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதைக்கருத்தில் கொண்டே நோயாளிகள், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைத்து விதமான நோய்கள் குறித்தும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கோவையில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை,'' என்றார்.