/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்; மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்; மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை
உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்; மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை
உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்; மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை
உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்; மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை
ADDED : செப் 10, 2025 10:22 PM

கோவை; கோயமுத்துார் மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம், இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று மாலை நடந்தது.
சங்க தலைவர் கணேசன் கூறுகையில், ''பொட்டலப் பொருட்கள் மற்றும் எடையளவு உரிமம் பெற தொழிலாளர் நலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை என இரு வேறு துறைகளின் கீழ் உரிமம் பெற வேண்டியுள்ளது.
இரட்டை உரிம முறையை நீக்கி, உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தராசுகள் மற்றும் அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் கால அளவை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டாக உயர்த்த வேண்டும்,'' என்றார். சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, பாரூக், ரமேஷ், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்செந்துாருக்கு ரயில்
இயக்க வேண்டுகோள்
'மார்க்கெட் உட்பகுதியில், பெரிய கடை வீதி சந்திப்பில் இருந்து ராஜ வீதி சந்திப்பு வரை இருபு றமும் நடைபாதை அமைக்க வேண்டும், பெரிய கடை வீதியில், முத்து விநாயகர் கோவில் சந்திப்பில் இருந்து ரங்கே கவுடர் வீதி வரை, ஒரு வழிப்பாதையாக இருப்பதை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் இருவழி பாதையாக, அறிவிக்க வேண்டும். திருச்செந்துார் செல்ல பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை வழியாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும்' என்பன உள்ளிட் ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.