/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ஜி.ெஹச்.,ல் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ADDED : ஜூலை 04, 2025 10:20 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியை ஏமாற்றி, மூன்று பவுன் நகை பறித்துச் சென்றவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சுபத்ரா,65, கடந்த மாதம், 27ம் தேதி கை வலி காரணமாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் சீட்டு பெற்றுக்கொண்டு டாக்டரை சந்திக்க சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், இலவசமாக தங்க கம்மல் கொடுப்பதாகவும், நகை போட்டு இருந்தால் கொடுக்க மாட்டாங்க என, மூதாட்டியிடம் தெரிவித்தார். இதை நம்பிய மூதாட்டி, மூன்று பவுன் நகையை கழற்றிய போது, பார்த்து விட்டு தருவதாக கூறி வாங்கிய நபர், நகையுடன் தப்பியோடினார். இது குறித்து, மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், மதுரையை சேர்ந்த சித்ரவேல்,49, என்பதும், மூன்று பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர். இந்த நபர் மீது, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.