/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொன்றவர் கைது நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொன்றவர் கைது
நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொன்றவர் கைது
நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொன்றவர் கைது
நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொன்றவர் கைது
ADDED : செப் 22, 2025 04:04 AM

போத்தனுார்:நகைக்கு ஆசைப்பட்டு, நண்பனை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த சீரபாளையம், கற்பக விநாயகர் கார்டனை சேர்ந்தவர் பாலுசாமி, 41; சொந்தமாக மீட்பு வாகனம் ஓட்டி வந்தார்.
செப்., 11ம் தேதி இரவு, தன் இரண்டாவது மனைவி பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு, தொழில்ரீதியாக செல்வதாக கூறியுள்ளார். மறுநாள் பரமேஸ்வரி, பாலுசாமியை தொடர்பு கொண்டபோது, போன் 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்தது.
பரமேஸ்வரி புகாரில், மதுக்கரை போலீசார் விசாரித்து, முத்து நகரில் குடியிருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த ஆடு விற்பனையாளர் மகாலிங்கம், 55, என்பவரை கைது செய்தனர்.
மகாலிங்கமும், பாலுசாமியும் நண்பர்கள். சில மாதங்களுக்கு முன், பாலுசாமியிடம் அவர், 20,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மகாலிங்கத்திற்கும் அப்பகுதியிலுள்ள தனியார் கல்லுாரி கேன்டீனில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் உறவு இருந்துள்ளது.
இப்பெண்ணுடன் பாலுசாமியும், உல்லாசமாக இருந்து வந்துள்ளார். செப்., 11ல் அப்பெண்ணுடன் பாலுசாமி உல்லாசமாக இருந்த பின், போதையில் அங்கேயே படுத்துள்ளார்.
அவரது கழுத்திலிருந்த 2 சவரன் நகையை, அப்பெண் கழற்ற முயன்றுள்ளார். பாலுசாமி சத்தமிட்டுள்ளார்.
அங்கிருந்த மகாலிங்கம் விசாரித்தபோது அப்பெண், தனக்கு கடன் பிரச்னை இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ஹாலோபிளாக் கல்லை பாலுசாமியின் தலையில் போட்டு மகாலிங்கம் கொலை செய்துள்ளார்.
சடலத்தை நைலான் சாக்கில் போட்டு, அருகே மழைநீர் வடிகாலில் வீசியுள்ளனர். பாலுசாமி போனை, சிட்கோவில் வேலை பார்க்கும் தன் மகனிடம் கொடுத்துள்ளார். முன்னதாக நகையை விற்று, இருவரும் பங்கிட்டுக் கொண்டனர்.
போலீசார் மகாலிங்கத்திடம் விசாரித்ததில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அழுகிய நிலையிலிருந்த பாலுசாமி சடலம் மீட்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய பெண்ணை போலீசார் தேடுகின்றனர். மகாலிங்கம், ஏற்கனவே மதுரையில் இரு பெண்களை கொலை செய்துள்ளதாக வழக்குகள் உள்ளன.