Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனைவியை இழிவுபடுத்தியதால் ஆவேசம்; ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது

மனைவியை இழிவுபடுத்தியதால் ஆவேசம்; ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது

மனைவியை இழிவுபடுத்தியதால் ஆவேசம்; ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது

மனைவியை இழிவுபடுத்தியதால் ஆவேசம்; ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது

ADDED : ஜூன் 11, 2025 09:41 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி, அவரது மகனை கத்தியால் குத்திய பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே, ரங்கசமுத்திரம் தொழிற்பேட்டையை சேர்ந்தவர் சிவதாசன்,64. இவர், கேரளா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, எல்.ஐ.சி., முகவராக உள்ளார். அவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியையான யமுனாராணி,57, அவரது மனநலம் குன்றிய மகன் ரவிசங்கர்,23 ஆகியோருடன் வசித்து வருகிறார்.

வீட்டுக்கு பெயின்டிங் வேலை செய்ய வந்த போது அறிமுகமான, பொள்ளாச்சியை சேர்ந்த ஷாஜகான்,25, என்பவரை, பாலிசி எடுக்குமாறு சிவதாசன் கேட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை சிவதாசன் வீட்டுக்கு ஷாஜகான் சென்று, தனது மனைவி வனன்சியா பெயரில் பாலிசி எடுக்க வேண்டுமென கேட்டார். இதற்கு சிவதாசன், 'சிலோன்காரிக்கு எல்லாம் பாலிசி போட முடியாது; அவள் இங்கிருந்து ஓடி போயிருவா,' எனக்கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஷாஜகான், கத்திரிக்கோலை எடுத்து சிவதாசன் தலையில், 15 இடங்களில் குத்தியுள்ளார். தடுக்க வந்த ரவிசங்கரையும் குத்தி விட்டு தப்பிச் சென்றார். அருகில் இருந்த வீட்டார், அவர்கள் இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த கோட்டூர் போலீசார், ஷாஜகானை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us