/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
ADDED : மே 24, 2025 06:06 AM
கோவைல : ரத்தினபுரி பகுதியில் பூட்டிய வீட்டில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 63; கோவை, ரத்தினபுரியில் தங்கியிருந்து 'வாட்ச்மேனாக' பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜான் என்பவர், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, பால்ராஜின் அண்ணன் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
வெங்கடேசன் பால்ராஜ் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பால்ராஜ் படுக்கையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பால்ராஜின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.