/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம் ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம்
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம்
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம்
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம்
ADDED : மே 17, 2025 05:04 AM
கோவை : ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், வரும் 29ல் மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடக்கிறது.
இது குறித்து, கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது:
கோவை ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், சமஸ்த பாபங்களை போக்கும் வகையில் கொலு வீற்றிருக்கும் ஆபத் சஹாய வில்வ லிங்கேஸ்வரரின் பரிபூர்ண அனுக்கிரஹத்தை பக்தர்கள் பெரும்வகையில், வரும் 29 காலை மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடக்கிறது.
காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, மஹா சங்கல்பம், 7:30 க்கு மஹன்யாச ஜபம், ருத்ரஆவாஹனம், 9 மணிக்கு ஸ்ரீ ருத்ரஜெபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு கோ பூஜையும், 11:00 மணிக்கு ஸ்ரீ ருத்ரஹோமமும், மதியம் 12:00 மணிக்கு வசோர்தாரையும், தம்பதிபூஜையும், மதியம் 12:30க்கு கலசாபிஷேகமும், மஹா தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டியினர், கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.